ஆதனச் சான்றிதழ்கள்
நிதி அவசரமாக தேவைப்படுபவர்கள் தங்கள் நிலம் அல்லது கட்டிடங்களை வணிக வங்கி அல்லது நிதி நிறுவனங்களிடம் அடகு வைத்து தங்கள் நிதித் தேவைகளை நிறைவு செய்கின்றனர். அவ்வாறு அடகு வைக்கும் பட்சத்தில் காணியின் சந்தை மதிப்பைக் கணக்கிடுவதற்கு, காணியின் வீதி எல்லைக் கோட்டுச் சான்றிதழ், சுவீகரிக்கப்படாமைக்கான சான்றிதழ் மற்றும் உடைமைச் சான்றிதழ்களை குறித்த நிதி நிறுவனங்கள் கோரும். குறித்த சான்றிதழ்களை உள்ளூராட்சி மன்றத்திடமிருந்து பெற்று சமர்ப்பிக்கவேண்டும். மேலும், குறித்த காணி சார்ந்து உள்ளூராட்சி மன்றத்திற்கு செலுத்த வேண்டிய ஆதனவரி மற்றும் இதர வரிகள் காணப்பட்டால், குறித்த காணியை அடகுவைத்து நிதிபெறுவதனை உள்ளூராட்சி மன்றம் தடை செய்யலாம். அவ்வாறான நிலைமையை தவிர்ப்பதற்காக உள்ளூராட்சி மன்றத்திற்கு செலுத்தவேண்டிய உரிய கொடுப்பனவுகளை செலுத்தி அதனை உறுதிப்படுத்தும் ஆட்சேபனையற்ற சான்றிதழை பெற்று சமர்ப்பிக்குமாறும் நிதி நிறுவனங்கள் உங்களை கோரும்.
உரிமைச் சான்றிதழ்/ உடைமைச் சான்றிதழ்
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
• வரலாற்றுத்தாள் 30 வருடங்களுக்கானது
• காணி உறுதி
• நிலஅளவை வரைபடம் 10 வருடங்களுக்குட்பட்டது
• அற்றோணித்தத்துவம் (தேவையேற்படின்)
• திருமணச்சான்றிதழ் (தேவையேற்படின்)
செலுத்த வேண்டிய கட்டணம்
மனை - ரூ.500.00
வர்த்தகம் - ரூ.1000.00
வீதி எல்லைக்கோட்டுச் சான்றிதழ்
சுவீகரிக்கப்படாமைக்கான சான்றிதழ்
கையகப்படுத்தாமைக்கான சான்றிதழ் என்பது ஏதேனும் அசையாத ஆதனமொன்றை சுவீகரித்துக்கொள்வதற்கு ஏதுவாக அமைகின்ற நிலைமை ஏற்படவில்லை என்பதற்காக வழங்கப்படுகின்ற சான்றிதழாகும். உள்ளூராட்சி மன்றத்திற்கு செலுத்த வேண்டிய ஆதன வரி மற்றும் பொருத்தமான இதர வரிகள் செலுத்தாமல் தவறவிடுகின்ற சந்தர்ப்பத்தில், ஏதேனும் அசையாத ஆதனமொன்றை சுவீகரித்துக்கொள்ளுவதற்கான அதிகாரம் உள்ளூராட்சி மன்றத்திற்கு உண்டு. குறித்த அசையாத ஆதனம் உள்ளூராட்சி மன்றம் சுவீகரித்துக்கொண்டு விற்பனை செய்வதனால் உரிய நிலுவை தொகை அறவிடப்படும். இந்தச்சான்றிதழ் மூலம் நிதிநிறுவனங்கள் குறித்த சொத்துக்கள் உள்ளூராட்சி மன்றம் சுவீகரித்துக்கொள்ளாது என்ற உறுதித்தன்மையின் அடிப்படையில் அடகுவைத்த வாடிக்கையாளருக்கு சொத்தின் பெறுமதியை அடிப்படையாக கொண்டு நிதியினை கடனாக வழங்கும்.
இச்சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களிற்கு மட்டும் செல்லுபடியானதாகும்.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
(அ) விண்ணப்பதாரி ஆதனத்தின் சட்டரீதியாக உரிமையாளராயின், கையகப்படுத்தாமைக்கான சான்றிதழுக்கு தேவைப்படும் ஆதனத்தின் விபரங்கள் (ஆதனம் அமைந்துள்ள இடத்தின் முகவரி, மதிப்பீட்டு இலக்கம்) உள்ளடக்கிய கடிதம் மூலம் மேற்கொள்கின்ற கோரிக்கை.
(ஆ) விண்ணப்பதாரி ஆதனத்தின் சட்டரீதியான உரிமையாளராகாதவிடத்து விண்ணப்பதாரியிடம் இந்த விபரங்கள் வழங்குவதில் எந்தவொரு எதிர்ப்பும் இல்லை எனவும், குறித்த விபரங்கள் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பதாரியிடம் அதிகாரம் கையளிக்கப்பட்டது எனவும் சட்டரீதியான உரிமையாளரால் எழுத்துமூலம் அதிகாரம் அளிக்கப்பட்ட, சமாதான நீதவான் சான்றுப்படுத்திய கடிதம்.
(இ) பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்படிவம்
(ஈ) ஆதன உறுதியின் ஒரு நிழல் பிரதி, சரிபார்ப்பிற்காக மூலப்பிரதிகளுடன்
(உ) காணியின் வரைபட ஒரு நிழல் பிரதி, சரிபார்ப்பிற்காக மூலப்பிரதிகளுடன் (6 மாதங்களிற்குள் எடுக்கப்பட்டது)
(ஊ) நிலுவைகளுடன் நடப்பாண்டில் செலுத்தப்பட்ட ஆதனவரி பற்றுச்சீட்டு
(எ) வரலாற்று தாள் - சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒன்று
செலுத்த வேண்டிய கட்டணம்
மனை - ரூ.500.00
வர்த்தகம் - ரூ.1000.00