காணி, கட்டட அபிவிருத்தி
காணி உப பிரிவிடல், ஒருங்கிணைப்பிற்கான அனுமதி
நகரமயமாகி வருகின்ற மற்றும் எதிர்காலத்தில் நகரமயமாவதற்கு வாய்ப்புள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் பிரேரிக்கப்படுகின்ற பிரதேசத்திற்குள் உள்ள ஏதேனும் ஒரு காணியை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பகுதிகளாகப் பிரிக்கும்போது அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காணித்துண்டுகளை ஒருங்கிணைக்கும்போது, சுகாதாரத்திற்கு மற்றும் சூழலுக்கு ஏற்படுகின்ற தாக்கத்தைக் குறைப்பதற்குத் தேவையான ஒழுங்கமைக்கும் அதிகாரம், நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் உள்ளூராட்சி மன்றங்களிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், ஏதேனும் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரப் பிரதேசத்திற்குள், அபிவிருத்தியடைந்த பிரதேசங்கள் என்ற ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்திற்குள் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து காணி துண்டு பிரிப்புகளும், காணி ஒருங்கிணைப்பு செயற்பாடுகளுக்காகவும் உள்ளூராட்சி மன்றங்களின் அனுமதி பெறப்படுதல் வேண்டும்.
கட்டட நிர்மாண அனுமதி
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைக்குள் மேற்கொள்ளப்படுகின்ற நிர்மாணப் பணிகளை ஒழுங்குபடுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட சட்டதிட்டங்கள் ஊடாக அந்த எல்லைக்குள் வசிக்கின்ற மக்களது சுகாதாரம், ஆரோக்கியம், வசதிகள் மற்றும் நலனோம்பல் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் சட்டரீதியான அதிகாரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரப் பிரதேசத்திற்குள் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து நிர்மாணப் பணிகளும், உள்ளூராட்சி மன்றங்களினால் வழங்கப்படுகின்ற நிர்மாண அனுமதிப்பத்திரத்தின் கீழ் மட்டுமே மேற்கொள்ளப்படுதல் வேண்டும். இந்த அனுமதிப்பத்திரத்தை வழங்கும்போது ஆரோக்கியம், சுகாதாரம், மற்றும் நலனோம்பல் வசதிகள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளைப் பின்பற்றுதல் வேண்டும்.
குடிபுகு சான்றிதழ் வழங்குதல்
உள்ளூராட்சி மன்றத்தின் எல்லைக்குள் மேற்கொள்கின்ற எந்தவொரு வகையிலுமான கட்டுமானம் அல்லது காணி உபபிரிவிடல் அல்லது காணிகளை ஒன்றிணைத்தல் என்பன மேற்கொள்வதற்கு முன்னர் அதற்காக அபிவிருத்தி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளுதல் கட்டாயமானதாகும். அவ்வாறான அபிவிருத்தி அனுமதிப்பத்திரத்துடன் மேற்கொள்கின்ற கட்டுமானம், காணி உப பிரிவிடுகை மற்றும் காணி ஒன்றிணைத்தல் மேற்கொண்ட பின்னர் கட்டிடத்தினை பயன்படுத்துவதற்கு முன்னர் அல்லது காணியாகுமிடத்து அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத்திடமிருந்து இசைவுச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
'இசைவுச் சான்றிதழ்' என்பது, கட்டுமானமாகுமிடத்து அங்கீகரிக்கப்பட்ட திட்டம் மற்றும் அதற்கு ஏற்புடையதான அனுமதிப் பத்திரத்தில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கமைவாக நிருமாணிக்கப்பட்டுள்ளதாகவும், காணி உபபிரிவிடல் அல்லது ஒருங்கிணைத்தல் என்பவற்றுக்காக வழங்கிய அனுமதிக்கமைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வழங்கப்படும் சான்றிதழாகும்
அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக்காலத்தை நீடித்தல்
உள்ளூராட்சி மன்றத்தின் எல்லைக்குள் மேற்கொள்கின்ற எந்தவொரு வகையிலுமான கட்டுமானங்களுக்காக அல்லது காணி உபபிரிவிடலுக்காக வழங்கிய கட்டுமான அனுமதிப்பத்திரம் அல்லது அபிவிருத்தி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியான காலம் ஓராண்டுக்கு மட்டும் ஏற்புடையதாகும். அந்த அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியான காலப்பகுதிக்குள் ஏற்புடைய கட்டுமானங்கள் அல்லது அபிவிருத்தி பணிகள் என்பன முடிவுறுத்தப்பட்டு இசைவுச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
எவரேனுமொரு நபருக்கு ஓராண்டு காலப்பகுதியில் ஏற்புடைய கட்டுமானங்களை முடிவுறுத்துவதற்கு இயலாது எனின், குறித்த அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியான காலம் மேலும் ஓராண்டுக்கு நீடிக்கப்படலாம்.