சாவகச்சேரி நகராட்சி மன்றத்தினால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்நூலகமானது மீசாலை மேற்கு, கண்டி வீதியில் அமைந்துள்ளது. நூலகம் தற்போது விஸ்தரிக்கப்பட்ட சேவையை ஆற்றுவதால் பலதரப்பட்ட மக்கள் பயன்பெற வாய்ப்பாக உள்ளது. சாவகச்சேரி பொதுநூலகத்திற்கு சென்று பயன்பெறுவதில் உள்ள சிரமங்கள் காரணமாக மக்களின் வேண்டுகோளின் பேரில் இது ஒரு கிளை நூலகமாக ஆரம்பிக்கப்பட்டது. இங்கு பத்திரிகைப் பகுதி, சஞ்சிகைகள் பகுதி, இரவல் வழங்கும் பகுதி, உசாத்துனை பகுதி, சிறுவர் பகுதி, பிரதியாக்கல் சேவை என தனித்தனியாக பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளதால் இக் கிராமத்தைச் சேர்ந்த பல தரப்பட்ட மட்டத்தினரும் பயன்பெறக்கூடியவாறு உள்ளது. அதாவது சிறுவர்கள் முதல் முதியோர் வரை அவரவர் விரும்பியவாறு தேவைகளையும் தகவல்களையும் பூர்த்தி செய்யக்கூடியவாறு உள்ளதெனக் கூறலாம்.
நூலகம் திறக்கும் நாட்கள் திங்கள் - ஞாயிறு (பொது விடுமுறை தினங்கள் உட்பட) நேரம் காலை 8.00 மணி தொடக்கம் மலை 5.00 மணி வரை ஆகும்.
அங்கத்துவ நடைமுறை
12 வயதிற்கு உட்பட்டோர் சிறுவர் அங்கத்தவர்களாக இருக்க முடியும்.
12 வயதிற்கு மேற்பட்டோர் வளர்ந்தவர்களுக்கான அங்கத்தவர்களாக இருக்கின்றனர். சிறுவர்களுக்கான ஒரு வருட அங்கத்துவக்கட்டணம் ரூபா 100.00 ம் வருடாந்த புதுப்பித்தல் கட்டணமும் ரூபா 100.00ம் ஆகும். வளர்ந்தவர்களுக்கான ஒருவருட அங்கத்துவ கட்டணம் ரூபா 200.00 ம் வருடாந்த புதுப்பித்தல் கட்டணமும் ரூபா 200.00ம் ஆகும். நூலக அங்கத்தவராக எவரும் இணைந்துகொள்ள முடியும் அங்கத்தவருக்காக பிணை நிற்பவர் சாவகச்சேரி நகரசபைக்குள் வசிப்பவராகவும், நகரசபைக்கு வரி செலுத்துபவராகவும் இருத்தல் வேண்டும்.