உள்ளூராட்சி வார பரிசளிப்பு நிகழ்வு – 2023

உள்ளூராட்சி வார விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி மகுடம் சூடியவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு எமது மன்றத்தின் பொன்விழா மண்டபத்தில் 2024.02.21 அன்று மன்ற செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.பொ.ஸ்ரீவர்ணன், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு.க.சந்திரகுமார் -  செயலாளர்,  சாவகச்சேரி பிரதேச சபை அவர்களும், அவர்களுடன் சபையின் சட்ட ஆலோசகர் திருமதி.அ.சிவவாணி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

259A6919
259A6921
259A6922
259A6944
259A6968

 

தன்னியமயமாக்கல் நிகழ்ச்சித்திட்டம்

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் சாவகச்சேரி பொதுநூலகத்தை தன்னியமயமாக்கல் திட்டத்தின் ஒருபகுதி நடவடிக்கைக்காக மற்றும் பயிற்சி வழங்கல், பார்வையிடல் தொடர்பாக தேசிய நூலகம், நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபை மற்றும் ருNனுP நிறுவன உ யர் அதிகாரிகள் நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

FB_IMG_1709185503383
FB_IMG_1709185508405

 

உள்ளூராட்சி வார விளையாட்டுப் போட்டிகள் – 2023

2023ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு 2024.01.11 அன்று சாவகச்சேரி நகராட்சி மன்ற முன்றலில் எமது உத்தியோகத்தர்களுக்கிடையே உள்ளக விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டன. 

20240126_151406
IMG-20240111-WA0038

அதுமட்டுமல்லாது 2024.01.26 அன்று மட்டுவில் மோகனதாஸ் விளையாட்டு மைதானத்தில் உள்ளூராட்சி மன்ற சபைகளுக்கிடையிலும் மென்பந்து சுற்றுப்போட்டிகள் (ஆண், பெண்) மற்றும் கயிறிழுத்தல் போட்டிகள் (ஆண், பெண்) நடாத்தப்பட்டன.

20240126_161839

2024ஆம் ஆண்டிற்கான கடமைச் செயற்பாடுகளின் ஆரம்ப நிகழ்வு

நகராட்சி மன்றத்தின் 2024ஆம் ஆண்டிற்கான கடமைச் செயற்பாடுகள் "வலுவான எதிர்காலத்திற்கான தொடக்கவுரை" எனும் தொனிப்பொருளில் 2024.01.01 அன்று காலை 9.00 மணிக்கு அலுவலக முன்றலில் மன்றத்தின் செயலாளர் திரு.அருளானந்தம் சீராளன் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.
இந்நிகழ்வு தேசியக்கொடி ஏற்றலுடன் உத்தியோகத்தர்களின் இரண்டு நிமிட மௌன அஞ்சலி மற்றும் உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாண உறுதியுரையைத் தொடர்ந்து செயலாளரின் உரையுடன் இனிதே நிறைவுபெற்றது.

FB_IMG_1707207698192
FB_IMG_1707207674241

 

சர்வதேச மண் தினம் – 2023

IMG-20231205-WA0030

சர்வதேச மண் தினத்தை முன்னிட்டு சாவகச்சேரி நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட கண்டி வீதிகளில் ( மீசாலை - நுணாவில்) உக்காத கழிவுகளைச் சேகரிக்கும் விழிப்புணர்வுச் செயற்றிட்டம் 2023.12.05அன்று நடைபெற்றது. இச் செயற்றிட்டம் நகராட்சி மன்ற செயலாளரின் தலைமையில் இடம்பெற்றதுடன் நகராட்சி மன்ற உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பிரதேச செயலக  உத்தியோகத்தர்கள், கிராம சேவை அலுவலர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,  பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,  பொது சுகாதாரப் பரிசோதகர்கள், இராணுவத்தினர் எனப் பலதரப்பினரும் கலந்து கொண்டனர். 

மண்தின நிகழ்வின் இறுதிக்கட்டமாக சாவகச்சேரி பஸ்நிலைய சுற்றாடலில் மரக்கன்றுகள் நடப்பட்டது. 

IMG-f6f536b4e1294d02b0d4454e3452ceaa-V
IMG-8e48e8f8f6fad0a84798a1cbf3943b51-V

 

பாடசாலை மாணவர்களால் வரையப்பட்ட சுவரோவியம்

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் அனுசரணையில் மீசாலை கிழக்கு மதுவன் சனசமூக நிலையம் சார்ந்த பாடசாலை மாணவர்களால் வரையப்பட்ட சூழலை நேசிப்போம் எனும் தலைப்பிலான சுவரோவியம் வரையப்பட்டது.

"நாம் மண்ணில் வீசி எறியும் கழிவுகள் மண்ணின் ஆழப்பகுதியில் (வெட்டிய யன்னல் பகுதி வெளியே காணப்படுகிறது) புதைந்து சூழலை மாசுபடுத்துகிறது எனவே இரண்டு கைகளாலும் பூமியை பாதுகாத்து கொள்வோம், அதற்காக பூமியின் ஆழப்பகுதிக்கு செல்லும் கழிவுகளை நிற கழிவுக் கூடைகளில் சேகரித்து சூழலை நேசிப்போம்" எனும் விளக்கத்தை இவ் ஓவியம் வழங்குகிறது.

நுணாவில் பொதுநூலக தேசிய வாசிப்பு மாதப் போட்டிகள் – 2023

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு எமது சபையின் கீழ் இயங்கும் நுணாவில் பொதுநூலகத்தில் 2023.10.20 அன்று தரம் - 01,02 மாணவர்களிற்கான சொல்லாக்கல் போட்டியும், தரம் - 03 மாணவர்களிற்கான விரைவு கணித போட்டியும், 2023.10.22 அன்று தரம் - 04 மாணவர்களிற்கு பொது அறிவு வினாப்பத்திர போட்டியும், தரம் - 05 மாணவர்களிற்கான புலமைப்பரிசில் பகுதி - 1 வினாத்தாள் பரீட்சையும், தரம் - 06,07 மாணவர்களிற்கு கட்டுரைப் போட்டியும், தரம் - 08, 09 மாணவர்களிற்கு சித்திரப் போட்டியும் நடைபெற்றது.

FB_IMG_1708582829114
FB_IMG_1708582708235
FB_IMG_1708582376005

 

2023 ஆம் ஆண்டிற்கான தேசிய வாசிப்பு மாதப் போட்டிகள் – சாவகச்சேரி பொதுநூலகம்

FB_IMG_1708581943115

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு "உலகம் வாசிப்பவர்க்கே சொந்தமானது" எனும் தொனிப்பொருளில் சாவகச்சேரி பொதுநூலகத்தில் 2023.10.16 அன்று தமிழ் சொல்லுருவாக்கல் போட்டியும், 2023.10.17 அன்று தரம் - 03 மாணவர்களிற்கான விரைவு கணித போட்டியும், 2023.10.18 அன்று தரம் - 04 மாணவர்களிற்கான வினாக்களுக்கு விடையளித்தல் போட்டியும் இடம்பெற்றது.

FB_IMG_1708581912636
FB_IMG_1708581933189

 

உள்ளுராட்சி வார நிகழ்வுகள் – சனசமூக நிலையங்களை தரப்படுத்தல்

2023ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி வார நிகழ்வுகளினை முன்னிட்டு, சனசமூக நிலையங்களை பலப்படுத்துவதற்கும், வலுப்படுத்துவதற்கும் ஏதுவாக நகரசபையின் அதிகார எல்லைக்குள் இயங்கிவரும் சனசமூக நிலையங்களை தரப்படுத்தும் செயற்றிட்டம் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் இடம்பெற்றது. இத்தரப்படுத்தல் செயற்றிட்டத்தில் உள்ளூராட்சி உதவியாளர் மற்றும் வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பங்கேற்றனர்.

FB_IMG_1708581825580
FB_IMG_1708581823028