கழிவுகளை சேகரிக்கும் வளநிலையம்

நகராட்சி மன்ற எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்கள் உக்கக்கூடிய மற்றும் உக்காத கழிவுகளை சிறந்த முறையில் அகற்றுவதற்கும், அதனை நகரசபையானது சிறப்பாக முகாமை செய்வதற்கும் ஏற்றவகையில் எமது வளநிலையத்தில் நிறகுப்பைக்கூடைகள் வைக்கப்பட்டுள்ளது. 

இவ்வள நிலையத்தில் 2024.05.01ஆம் திகதி முதல் வாரத்தில் 7 நாட்களும் 24 மணிநேரமும் கழிவுகளை ஒப்படைக்கமுடியும்.

               பச்சை – உக்கக்கூடிய கழிவுகள்

               செம்மஞ்சள் - பிளாஸ்ரிக் கழிவுகள்

               நீலம் - கடதாசிக் கழிவுகள்

               சிவப்பு – கண்ணாடிக் கழிவுகள்

               கபிலம் - உலோகக் கழிவுகள்

               சாம்பல் - இலத்திரனியல் கழிவுகள்

               மஞ்சள் - தொற்றுக்கழிவுகள் (பம்பஸ்)


எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க கழிவுகளை உரியமுறையில் அகற்றுவோம்.

Farm to Gate செயலியில் பதிவு செய்தல்

வடக்கு மாகாணத்தின் உற்பத்திகளுக்கும் சேவைகளுக்குமான இலவச இணையவழி சந்தை வாய்ப்புக்களுக்கு வசதியளிக்கும் வகையில் Farm to Gate செயலி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இச்செயலியின் மூலம் உற்பத்திகள் மற்றும் சேவைகளை விற்பனை செய்பவரும் நுகர்வோரும் நேரடியாக தொடர்புகொண்டு விற்பனை/ கொள்வனவு நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும்.

www.farmtogate.org எனும் இணையத்தளத்தில் பிரவேசிப்பதன் மூலம் சுயமாக தங்கள் பதிவுகளை மேற்கொள்ளமுடியும். அல்லது அருகிலுள்ள உள்ளுராட்சி மன்றத்திற்குச் சென்று பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Farm to Gate செயலி மூலம் பதிவுகளை மேற்கொண்டு பயன்பெறுவீராக...

போக்குவரத்து நெருக்கடி தொடர்பான கலந்துரையாடல்

சாவகச்சேரி நகர்ப்பகுதி வீதியோரங்களில் வாகனங்கள் நிறுத்துவதால் ஏற்படுகின்ற போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தீர்வுகாணுவதற்கான கலந்துரையாடல் 2024.04.08 திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் நகராட்சி மன்ற அலுவலகத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் மன்றின் செயலாளர், கணக்காளர், பிரதேச செயலக கணக்காளர், சபையின் நிர்வாக உத்தியோகத்தர், உள்ளுராட்சி உதவியாளர், பொதுச்சுகாதாரப் பரிசோதகர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், வருமானப் பரிசோதகர், உத்தியோகத்தர்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதி ஆகியோர் கலந்துகொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

மேலும், பொலிஸாரால் அடையாளப்படுத்தி தரப்படும் இடங்களில் “No Parking” பலகையிடல், வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் கலந்துரையாடி வீதிகளுக்கு மீள்கோடிடல், நகர்ப்பகுதிக்கு அண்மையில் வாகனத்தரிப்பிட வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் போன்ற தீர்வுகள் எட்டப்பட்டன. நிலைமையை ஆராய்வதற்கான களத்தரிசிப்புடன் கலந்துரையாடல் நிறைவுபெற்றது.