சாவகச்சேரி நகர்ப்பகுதி வீதியோரங்களில் வாகனங்கள் நிறுத்துவதால் ஏற்படுகின்ற போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தீர்வுகாணுவதற்கான கலந்துரையாடல் 2024.04.08 திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் நகராட்சி மன்ற அலுவலகத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் மன்றின் செயலாளர், கணக்காளர், பிரதேச செயலக கணக்காளர், சபையின் நிர்வாக உத்தியோகத்தர், உள்ளுராட்சி உதவியாளர், பொதுச்சுகாதாரப் பரிசோதகர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், வருமானப் பரிசோதகர், உத்தியோகத்தர்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதி ஆகியோர் கலந்துகொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர்.
மேலும், பொலிஸாரால் அடையாளப்படுத்தி தரப்படும் இடங்களில் “No Parking” பலகையிடல், வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் கலந்துரையாடி வீதிகளுக்கு மீள்கோடிடல், நகர்ப்பகுதிக்கு அண்மையில் வாகனத்தரிப்பிட வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் போன்ற தீர்வுகள் எட்டப்பட்டன. நிலைமையை ஆராய்வதற்கான களத்தரிசிப்புடன் கலந்துரையாடல் நிறைவுபெற்றது.