நகரத்தினை தூய்மைப்படுத்தும் நோக்கில் நகராட்சிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை சிறந்தமுறையில் அகற்றுவதனை ஊக்கப்படுத்தும் முகமாக நிறக்கழிவுக்கூடைகள் மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பஸ்தரிப்பு நிலையம் முன்பாக, தென்மராட்சி பிரதேச செயலகம் முன்பாக, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக, டச்சு வீதி மற்றும் கண்டி வீதி போன்ற இடங்களில் இந்நிறக்கழிவுக்கூடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கழிவுகளை வீதிகளில் வீசாது சிறந்தமுறையில் அகற்றி சூழலுக்கு நேயமாக செயற்படுவோமாக…
Month: June 2024
உலக சுற்றாடல் தின மரநடுகை நிகழ்ச்சித்திட்டம் – 2024
“பயனுறுதி மிக்க நிலப்பயன்பாட்டின் ஊடாக நலம் நிறைந்த நாடு” எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்பட்ட சர்வதேச சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மரநடுகை நிகழ்ச்சித்திட்டமானது சபையின் செயலாளர் திரு.அ.சீராளன் அவர்கள் தலைமையில் யூன் 05ஆம் திகதி சாவகச்சேரி நகராட்சிமன்ற பொது மைதானத்தில் நடைபெற்றது.
உலக சுற்றாடல் தினம் – 2024
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்ரிக் பயன்பாட்டினால் சுற்றாடலுக்கும் உயிரினங்களுக்கும் ஏற்படும் தீங்குகள் மற்றும் காலநிலை மாற்றத்தில் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பான செயலமர்வானது யாஃ சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 2024.05.31ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்றது. இச்செயலமர்வில் World Vision நிறுவன உத்தியோகத்தர்கள், சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர், பாடசாலை அதிபர், மாணவர்கள் மற்றும் பெற்றோர் போன்றோரும் பங்குபற்றியிருந்தனர்.
கழிவுமுகாமைத்துவ திட்டம் தொடர்பான களவிஜயம்
World Vision நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் இயங்கிவரும் PHINLA செயற்றிட்டத்தின் செயற்பாடுகளைப் பார்வையிடுவதற்கான களவிஜயமானது 2024.05.29 அன்று இடம்பெற்றது. இக்களவிஜயமானது திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவம் தொடர்பான சிறு கலந்துரையாடலுடன் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் மேல்மாகாண திண்மக்கழிவு முகாமைத்துவ மேலாண்மை மத்திய நிலைய தவிசாளர், மேல்மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், வத்தளை பிரதேசசபை, யா-எல நகரசபைச் செயலாளர் மற்றும் சபை உத்தியோகத்தர்கள், நகராட்சிமன்ற நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் சபை உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், வேல்ட் விசன் நிறுவனகுழுவினர் போன்றோரும் பங்குபற்றியிருந்தனர்.