சாவகச்சேரி நகராட்சிமன்ற எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் கட்டணசேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கையினை சாவகச்சேரி நகரசபையினர் மற்றும் சாவகச்சேரி பொலிஸார் இணைந்து 2024.09.10 செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ளனர்.
நகரசபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டணசேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் உரிய ஸ்டிக்கரினை நகரசபை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், ஸ்டிக்கர் இல்லாத முச்சக்கரவண்டிகள் சபை எல்லைக்குள் சேவையில் ஈடுபடமுடியாது என்பதனை அறியத்தருகின்றோம்.