சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட நகரப்பூங்கா பொதுமக்கள் பாவனைக்காக 2025.01.17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று திறந்துவைக்கப்பட்டது.
நகராட்சி மன்றின் செயலாளர் திரு. அ.சீராளன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நகராட்சி மன்ற உத்தியோகத்தர்கள், நகரப்பூங்காவிற்கு விளையாட்டு உபகரணங்களில் ஒரு தொகுதியினை நன்கொடையாக வழங்கிய தென்மராட்சி அபிவிருத்திக் கழகம், முன்னைநாள் சாவகச்சேரி நகர சபையின் உறுப்பினர் அமரர் யோகேஸ்வரன் ஜெயக்குமார் அவர்களின் குடும்பத்தினர், முன்பள்ளிச் சிறார்கள் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.