சபையின் வரலாறு

மக்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்யும் ஜனநாயக பாரம்பரியத்தின் ஆரம்பமே உள்ளூராட்சி சபைகளின் உதயம் என்றால் மிகையாகாது. இலங்கையில் 1898ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட “கோல் புறுக் கமரன்” சீர்திருத்தச் சட்டத்தின் மூலம் உள்ளூராட்சி முறைக்கு அடி கோலினாலும் 1920ல் சமர்ப்பிக்கப்பட்ட டொனமூர் அரசியல் திட்டம் 1928ல் அமுலுக்கு கொண்டுவரப்பட்ட பின்புதான் ஜனநாயக ரீதியான உள்ளூராட்சிச் சபைகள் உருவாக்கப்பட்டன.


யாழ் மாவட்டத்திலே குடிமக்களால் தெரிவு செய்யப்பட்ட கிராமச் சங்கங்கள் 1924ஆம் ஆண்டின் 9ம் இலக்க கிராமச் சங்கச் சட்டத்தின் 30ஆம் பிரிவின் கீழ் உத்தமனர் தேசாதிபதி அவர்களுக்கு வழங்கப்பட்ட தத்துவத்தின் மூலம் அதிகார மந்திரி சபையாருடைய ஆலோசனையோடு, குறிப்பிடப்பட்ட சட்டத்தின் 20ஆம் பிரிவின் கீழ் 03.02.1928ல் அங்கீகரிக்கப்பட்டு 08.06.1928ஆம் திகதிய 7647ஆம் இலக்க இலங்கை வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.


இந்தவகையில் சாவகச்சேரி நகராட்சிமன்றமானது 1928ல் கிராமச் சங்கமாக ஆரம்பிக்கப்பட்டு, 22.03.1941ல் கிராம சபையாக அங்கீகரிக்கப்பட்டு, 8730ஆம் இலக்க 28.03.1941ஆம் திகதிய வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது. 01.01.1949ல் பின்வரும் 08 வட்டாரங்களை உள்ளடக்கி பட்டின சபையாகத் தரம் உயர்த்தப்பட்டது.

                         சாவகச்சேரி மத்தி

                         நுணாவில் கிழக்கு

                         நுணாவில் மேற்கு

                         சங்கத்தானை

                         கோயிற்குடியிருப்பு

                         சாவகச்சேரி வடக்கு

                         கல்வயல்

                         மீசாலை


காலத்தின் தேவைக்கேற்ப நகரின் வளர்ச்சியையும் வருமான உயர்ச்சியையும் கவனத்திற் கொண்டு

                          மடத்தடி

                          மீசாலை தெற்கு

ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கி 10 வட்டாரங்களுடன் 1964ல் நகரசபையாகத் தரமுயர்த்தப்பட்டது. 01.01.1968ல்

                        மட்டுவில் தெற்கு பகுதியையும்


உள்ளடக்கி 11 வட்டங்களைக் கொண்ட நகரசபையாக பின்வருமாறு விஸ்தரிக்கப்பட்டு,

                         1. மீசாலை தெற்கு (மேற்கு)

                         2. மீசாலை தெற்கு (கிழக்கு)

                         3. கெருடாவில்

                         4. கல்வயல்

                         5. நுணாவில் மேற்கு

                         6. நுணாவில் கிழக்கு

                         7. வாரிவனேஸ்வரா

                         8. கோயிற்குடியிருப்பு

                         9. சாவகச்சேரி நகரம்

                        10. அரசடி

                        11. சப்பச்சி மாவடி

தற்போது நகராட்சிமன்றம் எனும் பெயருடன் தரமுயர்ந்து சேவையாற்றுகிறது.

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் கடமையாற்றிய செயலாளர்கள்

இலசெயலாளர்களின் பெயர்கடமையாற்றிய காலப்பகுதி
1திரு.எஸ்.கே.சின்னத்தம்பி01.01.1964 - 31.12.1966
2திரு.ஆர்.திருநாவுக்கரசு01.01.1967 - 31.12.1971
3திரு.எம்.காங்கேசு01.01.1972 - 31.10.1975
4திரு.எம்.தாமோதரம்பிள்ளை01.02.1976 - 30.06.1976
5திரு.ரி.நடராசா01.07.1976 - 31.12.1976
6திரு.த.நவரத்தினராசா01.01.1977 - 30.12.1993
7திரு.சி.நடராசா31.12.1993 - 02.12.1997
8திரு.மு.செ.சரவணபவ03.11.1997 - 31.08.2004
9திருமதி.கு.ஆறுமுகம்01.09-2004 - 19.08.2009
10செல்வி.வீ.சிவக்கொழுந்து01.03.2010 - 31.12.2010
11திரு.கொ.ஜக்சீல்01.01.2011 - 31.12.2011
12திரு.சு.புத்திசிகாமணி01.01.2012 - 25.04.2013
13திரு.கா.சண்முகதாசன்14.06.2013 - 21.03.2019
14திரு.சீ.சபேசன்22.03.2019 - 01.03.2021
15திரு.சு.சுபாஸ்கரன்02.03.2021 - 03.01.2023
16திரு.அ.சீராளன்04.01.2023 - இன்றுவரை