உள்ளூராட்சி மன்றத்தின் எல்லைக்குள் வசிக்கின்ற மக்களது சுகாதாரம், வசதி, நலனோம்பல் மற்றும் எல்லா வசதிகளையும் பாதுகாப்பதற்கான விடயங்களை முறைப்படுத்தல், கட்டுப்படுத்தல் மற்றும் நிருவாகம் ஆகியவை உள்ளூராட்சி மன்றங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பிரதான கடமைப் பொறுப்புகளாகும். உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைக்குள் நடைபெறுகின்ற வணிகம் அல்லது வியாபாரங்களுக்கிடையில் பொதுமக்களின் சுகாதாரம், வசதி மற்றும் நலனோம்பல் என்பவற்றுக்கு ஏற்புடையதாக உள்ளூராட்சி மன்றங்களின் சட்டங்களின் கீழ், அல்லது உள்ளூராட்சி மன்றங்களினால் உருவாக்கப்பட்ட உபவிதிகளின் ஏற்பாடுகளுக்கமைவாக குறித்த வணிகம் அல்லது வியாபாரம் சார்ந்து குறித்த உள்ளூராட்சி மன்றத்தின் உரிமம் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். இந்த பணியினை ஒழுங்குபடுத்தல் குறித்த உள்ளூராட்சி மன்றத்தின் பொறுப்பு ஆகும்.